பெற்றோரின் கவனக்குறைவால் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த ஒரு வயது ஆண் குழந்தை

0 2088
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெற்றோரின் கவனக்குறைவால் ஒரு வயது ஆண் குழந்தை திறந்திருந்த தரைதள தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெற்றோரின் கவனக்குறைவால் ஒரு வயது ஆண் குழந்தை திறந்திருந்த தரைதள தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

பஞ்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் - புனிதா தம்பதிக்கு ஒரு வயதில் ரஷித் என்ற ஆண் குழந்தை இருந்தது. புனிதாவும், ரமேஷின் பெற்றோரும் வீட்டின் முன்புள்ள தரைதள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் எடுத்து ஊற்றுவதற்காக மூடியை சிறிதளவு திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே வந்த குழந்தை திறந்திருந்த தொட்டிக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments