அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்த பார்ட் ஒன் தான் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது , பார்ட் டூ விரைவில் வழங்கப்படும் - மு.க. ஸ்டாலின்

0 4091

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து, தமிழக அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை அளித்தார். ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும், விசாரணை நடைபெறுவதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

ஊழல் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளதால் அவரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது முதல் பாகம் தான் என்றும், மேலும் சில ஊழல்கள் குறித்து ஆதாரம் திரட்டி இரண்டாம் பாகம் வெளியிடப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments