விமான சேவை தடையால் பிரிட்டனில் சிக்கிய இந்திய மாணவர்கள்

0 2964

பிரிட்டனுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், தாயகம் திரும்ப முடியாமல் ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர்.

பிரிட்டனில் 70 சதவிகிதம் அதிக வீரியம் கொண்ட கொரோனாவின் புதிய வடிவம் பரவி வருகிறது. இதை அடுத்து பல நாடுகள் பிரிட்டனுக்கு பயணத் தடையை அறிவித்து, தங்களது எல்கைகளையும் மூடியுள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்த பல மாணவர்கள், இந்தியாவுக்கான விமான சேவை முடக்கப்பட்டுள்ளதால் வர வழியின்றி சிக்கித் தவிக்கின்றனர்.

பிரிட்டனில் சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டாலும், குடும்ப காரணங்களுக்காக அங்கு சென்றவர்களும் திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதிய வைரசின் அச்சுறுத்தலின் எதிரொலியாக, பிரிட்டனுக்கான வந்தே பாரத் சிறப்பு விமானங்களையும் ஏர் இந்தியா ரத்து செய்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments