புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா ஏற்கனவே பல நாடுகளுக்குப் பரவி இருக்கலாம் - சவுமியா சுவாமிநாதன்

0 2938
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

புதிய வைரஸ் 70 சதவீத வேகத்துடன் பரவி வருவதாக ஆரம்பக்கால ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் இங்கிலாந்து அரசு இது தொடர்பாக தக்க நேரத்தில் கவனமாக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகள் தங்கள் தரவுகளை சோதித்தால் இந்த புதிய வைரஸ் தொற்று ஏற்கனவே அங்கு பரவியிருப்பதை காண முடியும் என்றும் அவர் குறிபபிட்டார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து, ஆகிய இடங்களிலும் தென்ஆப்பிரிக்காவில் முழுவீச்சிலும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நோய்த் தொற்று குறித்தும் இதன் பாதிப்பு குறித்தும் ஆய்வுகள், பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் வெளியாக இரண்டு வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments