மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு -விவசாயிகள் ஆலோசனை
மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை நிராகரிப்பதா அல்லது ஏற்பதா என்று விவசாய சங்கங்கள் இன்று முடிவெடுக்க உள்ளன.
மத்திய அரசு தனது மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தைத் தொடர இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய விவசாய சங்கத் தலைவர்கள் மத்திய அரசு விவசாயிகள் பிரச்சினை என பட்டியலிட்ட எட்டு விஷயங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
அடிப்படைப் பிரச்சினையே வேளாண் சட்டங்களில் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். சீர்திருத்தங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பிரதமர் மோடி கூறியதாகவும் சுட்டிக்காட்டும் விவசாயிகள், பல்வேறு வகைகளில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Comments