இந்தியா - வியட்நாம் பிரதமர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

0 1861

ந்தியா - வியட்நாம் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இரு நாட்டு பிரதமர்களும் காணொலி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே அறிவியல் ஆய்வு, புதுப்பிக்க வல்ல எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல், பாதுகாப்பு, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட 7 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா- வியட்நாம் இடையிலான உறவை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் நிதி உதவியின் கீழ் வியட்நாமில் 7 வளர்ச்சி திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும்,1.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை கிழக்கு பிராந்திய செயலாளர் ரிவா கங்குலி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments