"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு கேமரா மூலம் எடுக்கப்பட்ட சிறுத்தை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அவர், இந்தியாவில் 12 ஆயிரத்து 852 சிறுத்தைகள் இருப்பதாக கூறினார்.
சிங்கங்கள், புலிகள் அதிகரித்துள்ளதைப் போல், சிறுத்தைகள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், சூழலியல் மற்றும் பல்லுயிர்தன்மையை நன்கு பாதுகாக்கும் நாடு இந்தியா என்பதை இது எடுத்துக்காட்டுவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்திய மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 3421 சிறுத்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Comments