வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சியை கேட்டதால் வடகொரியாவில் பொது மக்கள் முன்னிலையில் படகுகள் உரிமையாளர் சுட்டுக் கொலை - ரேடியோ ப்ரி ஆசியா செய்தி தகவல்

0 17803

டலில் மீன்பிடிக்கையில்  வெளிநாட்டு ரேடியோ நிலையங்களின் நிகழ்ச்சிகளை கேட்டதற்காக வடகொரியாவில் மீன்பிடி படகுகளின் உரிமையாளர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

50க்கும் மேற்பட்ட படகுகளின் உரிமையாளரும், வடகொரியா ராணுவ முன்னாள் ரேடியோ ஆப்பரேட்டருமான சோய் வெளிநாட்டு ரேடியோ நிகழ்ச்சியை கேட்டதாக கைது செய்யப்பட்டதாகவும், விசாரணையின்போது ராணுவத்தில் பணியாற்றிய 15 ஆண்டு காலமும் இந்த வழக்கம் இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டதால்,  படகுகளின் கேப்டன்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக  ரேடியோ ப்ரி ஆசியா செய்தி வெளியிட்டுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments