800 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் ஒரு அதிசய காட்சி: வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் மின்னுகின்றன
சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின் அரிய நிகழ்வாக சூரியனை சுற்றி வரும் வியாழன், சனி கோள்கள் வானில் இரவு நேரத்தில் ஒரே நேர்கோட்டில் வந்ததை பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் 2 கோள்களையும் வியப்புடன் பார்த்தனர். சூரியன் மறைந்த பிறகு இரு பெரிய நட்சத்திரங்கள் போல் அருகருகே இரு கோள்களும் காட்சி அளித்தன.
சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வைக் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதே போன்று அடுத்த நிகழ்வு 2418ஆம் ஆண்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments