கொரோனா பரவலை பொருட்படுத்தாது கடற்கரைகளில் அலைமோதும் பிரேசில் மக்கள்
கொரோனா பரவல் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கடற்கரைகளில் ஆயிரகணக்கானோர் கூடி பொழுது போக்கி வருகின்றனர்.
பிரேசிலில் கொரோனாவால் இதுவரை சுமார் 72 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதோடு, 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், அதை கண்டுகொள்ளாமல் சுற்றுலாவுக்கு பெயர் போன ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபாகாபனா, இபனேமா, லெப்னான் கடற்கரைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
Comments