மே.வங்கத்தில் திரிணமூல் காங்கிரசுக்கு தாவிய பாஜக எம்பியின் மனைவி, கட்சி மாறிய மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக எம்.பி தகவல்
மேற்கு வங்க பாஜக இளைஞர் அணித் தலைவரும், எம்பியுமான சவுமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், திடீரென திரிணமூல் காங்கிரசில் சேர்ந்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் பிஷ்ணுபூர் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் சவுமித்ரா கான் போட்டியிட்டார். கிரிமினல் வழக்கு ஒன்றில் அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில், தேர்தல் பிரச்சாரத்திற்காக அந்த தொகுதியில் நுழையக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே அவருக்குப் பதிலாக சுஜாதா மண்டல் தனியாக பிரச்சாரம் செய்து கணவரின் வெற்றியை உறுதி செய்தார். இந்த நிலையில் மனைவி கட்சி மாறியதை அடுத்து அவரை விவாகரத்து செய்யப்போவதாக சவுமித்ரா கான் கூறியுள்ளார்.
Comments