நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: சக நடிகை சரண்யாவிடம் விசாரணை
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், மற்றொரு சின்னத்திரை நடிகையிடமும், சித்ராவின் அண்டை வீட்டார்களிடம் ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது. முதலில் அண்டை வீட்டார்கள் 5 நபர்களிடம் இந்த விசாரணை நடைபெற்றது.
அதன் பிறகு சின்னத்திரை நடிகை சரண்யா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சித்ரா தற்கொலை செய்துகொண்ட பிளசன்ட் டேஸ் விடுதியில் ரூம் பாய் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
பணியின் போது ஏற்பட்ட மன உளைச்சலால் சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments