ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு

0 3727
ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஜனவரி 9 சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழோடும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றியும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments