பிரிட்டனில் பரவும் அதிவேக புதுரக கொரோனா வைரஸ் - போரிஸ் ஜான்சன் அவசர ஆலோசனை
70 சதவிகிதம் அதிக தொற்று திறன் உள்ள கொரோனா வைரசின் புதிய வடிவம் பிரிட்டனில் பரவுவதால், பல நாடுகள் அந்த நாட்டுடனான விமான சேவைகளை நிறுத்தி உள்ள நிலையில், அது குறித்த அவசர கூட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்தினார்.
லண்டனில் தேசிய நெருக்கடிக்கான கேபினட் குழுவின் கூட்டத்தை கூட்டிய அவர், சர்வதேச பயணத்திற்கு பல நாடுகள் விதித்துள்ள தடை குறித்தும், அதே நேரம் பிரிட்டனுக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து சரக்கு போக்குவரத்து நடப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விவாதித்தார்.
இதனிடையே பிரான்சின் தடையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு பிரிட்டனில் உள்ள முக்கிய துறைமுகமான டோவர் சரக்கு-பயணியர் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
Comments