தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், தேர்தல் ஆணையம் ஆலோசனை

0 1842
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, அரசியல் கட்சிகளின்  பிரதிநிதிகளுடன், தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை நடத்தியது.

நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்ட குழு, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில், தேர்தலை ஒரே கட்டமாக நடத்தலாமா? அல்லது 2 கட்டமாக நடத்தலாமா? என்பது பற்றி ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்ப ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளுடனும் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர், உளவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் நாளை சந்தித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பொது பிரச்சினைகள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments