குண்டு துளைக்காத கேரவன்... பல கோடியில் தயாரான மம்முட்டியின் பிரமிக்க வைக்கும் நகரும் வீடு

0 13858

நடிகர் மம்முட்டிக்கு கார்கள் மீது அலாதி பிரியம் உண்டு. இதனால், விதவிமாக கார்களை வாங்கு குவிப்பார். அந்த வகையில் மம்முட்டி புதியதாக வாங்கியுள்ள கேரவனும் கேரளாவில் பிரபலமாகியுள்ளது.

கேரளாவில் கூத்தமங்கலம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஓஜோஸ் என்ற நிறுவனம்தான் கேரவன் பாடி கட்டுவதில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, தனக்காக ஒரு நவீன கேரவனை ஆர்டர் செய்திருந்தார். இதற்காக, பாரத் பென்ஸ் நிறுவனத்திலிருந்து 12 மீட்டர் நீளம் கொண்ட வாகனம் வாங்கி கேரவனாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. இந்த கேரவனில் Benz's OM906 ரக இன்ஜீன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரக இன்ஜீன் 6,373 பிரேக் ஹார்ஸ் பவரை உற்பத்தி வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 

தற்போது, கேரவன்  பணிகள் முற்றிலும் முடிவுற்று விட்டது. டார்க் ப்ளுவில் வெள்ளை வண்ணத்துடன் கேரவன் தயாராகியுள்ளது. நடிகர் மம்முட்டிக்கு பிடித்தமான ராசியான எண் 369 ஆகும்.  மம்முட்டியின்  அனைத்து கார்களும் இந்த எண்ணில்தான் இருக்கும். அந்த வகையில், மம்முட்டியின் நவீன கேரவனுக்கும் KL 07 CU 369 என்ற எண்ணே பதிவு எண்ணாக பெறப்பட்டுள்ளது. இந்த கேரவனில் உள்ள வசதிகள் கேட்டால் பிரமித்து போவீர்கள். செமி புல்லட் புரூப் ரக கேரவனான இந்த வாகனம் ஓடும் போது உள்ளே துளி கூட இரைச்சல் கேட்காது. குலுக்கல், ஆட்டம் எதுவும் தெரியாது. படுக்கை அறை, கிச்சன் வசதிகள் உண்டு. கழிவறை டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் உண்டு. 

கேரவனில் படுக்கை அறைக்கு மேலே பானராமிக் சன்ரூப் ( panoramic sunroof )அமைக்கப்பட்டுள்ளது. தன் மொபைல் போன் வழியாகவே கேரவனில் உள்ள எந்த நவீன தொழில்நுட்பத்தையும் மம்முட்டியால் இயக்க முடியும். பாதுகாப்பு வசதிக்காக 360 டிகிரியில் இயங்கும் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா புகைப்படங்களை எடுத்து மும்முட்டியின் செல்போனுக்கு அனுப்பி கொண்டே இருக்கும். அலெக்ஸா வாய்ஸ் தொழில்நுட்பமும் இருப்பதால், சுவிட்ச் போடாமலேயே லைட் போடலாம், டி.வி. போடலாம். அதாவது, ஸ்விட்ச் ஆன் என்று சொன்னால் போதும் விளக்கு எரிய தொடங்கி விடும். யமஹா தியேட்டர் சிஸ்டத்தின் ஹோம் தியேட்டர் இதில்,பொருத்தப்பட்டுள்ளது. வைஃபியின் அட்வான்ஸ் தொழில் நுட்பமான ஹைஃபி இணைப்பும் உள்ளது.

தென்னிந்தியாவிலேயே நவீனமான மிகப் பெரியதுமான இந்த கேரவனை கட்டமைக்க எவ்வளவு செலவானது என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை. எனினும்,  பல கோடிகள் வரை செலவு செய்து கேரவன் தயாரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த கேரவன் automotive research association of india அமைப்பால் நடத்தப்படும் ஏ.ஐ.எஸ் 124 டெஸ்டிங் முறையில் அனைத்து பரிசோதனையிலும் பாஸாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments