ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசுக்கு இறுதி அவகாசம்

0 2525

ஆன்லைன் ரம்மியை தடை செய்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. 

ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல், கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வெளியில் சென்று ரம்மி விளையாடுவதைவிட ஆன்லைனில் விளையாடுவது பாதுகாப்பானது, திறமையை வளர்க்கக்கூடியது என்றும், குதிரைப் பந்தய வழக்குகளை சுட்டிக்காட்டியும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அவசர சட்டத்துக்கு பதிலாக ஜனவரி முதல் வாரத்தில் சட்டம் இயற்றப்படும் என்றும், அதன் பிறகு இறுதி வாதங்களை வைப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதையும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருதமுடியாது என தெரிவித்த நீதிபதிகள், இறுதி விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments