மூலப்பொருட்களின் விலை உயர்வு எதிரொலி?... புத்தாண்டில் விலையை உயர்த்த வாகன உற்பத்தியாளர்கள் முடிவு
மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, புத்தாண்டில் வாகன உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
உற்பத்தி செலவினம் அதிகரித்து விட்டதால் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வாகன விலை உயரும் என மாருதி சுஸுகி, ஹீரோ, மஹிந்திரா&மஹிந்திரா ஆகியன தெரிவித்துள்ளன. பஜாஜும், ராயல் என்பீல்டும் ஏற்கனவே விலையை உயர்த்தி விட்டன.
தீபாவளி நேரத்தில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாகன நிறுவனங்கள் விலையில் தள்ளுபடியை அறிவிக்கவில்லை. அதனால் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த விலையுயர்வால் வாகன விற்பனை மேலும் சரியும் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் பிஎஸ்-6 தரம் கட்டாயமானதை தொடர்ந்து பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 15 சதவிகிதம் வரை விலையை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.
Comments