சனி - வியாழன் கோள்கள் அருகருகே நெருங்கித் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு

0 20170
சனி - வியாழன் கோள்கள் அருகருகே நெருங்கித் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு

மேற்கு வானில் சனி - வியாழன் கோள்கள் அருகருகே நெருங்கித் தோன்றும் அரிய வானியல் நிகழ்வை இன்று மாலை காணலாம்.

பூமியில் இருந்து பார்க்கும்போது, இரு கோள்களும் அருகருகே நெருங்கி, பிரகாசமான ஒற்றைப்புள்ளி போல  தோற்றம் காட்டும் இந்த நிகழ்வை மாபெரும் ஒருங்கமைவு என்று வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சூரியன் மறைந்த பிறகு வானில் மேற்கு திசையில்,  இந்த கோள்கள் ஒரே புள்ளியில் சேர்ந்து காட்சியளிக்கும். வெறும் கண்களால் இந்த நிகழ்வைக் காணலாம். பைனாகுலர் மற்றும் சிறிய டெலஸ்கோப் மூலம் பார்க்கும்போது சிறப்பாக தெரியும்.

இருகோள்களும் ஒருங்கமைந்ததுபோல வானில் காட்சியளித்தாலும், உண்மையில் இரு கோள்களுக்கும் இடையேயான தூரம் சுமார் 74 கோடி கிலோ மீட்டர்.

சனி - வியாழன் கோள்களிடையேயான மாபெரும் ஒருங்கிணைவு சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழ்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments