சீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகம் அறிவிப்பு
சீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறக்கட்டளை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டம் சீரடியில் உள்ள கோயில், கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு, 8 மாதங்களுக்கு பிறகு அண்மையில் திறக்கப்பட்டது.
சாமி தரிசனத்துக்கு ஆரம்பத்தில் நாள்தோறும் 6 ஆயிரம் பேர் வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் விடுமுறை நாள்கள், மற்றும் வியாழக்கிழமையில் கூட்டம் மேலும் அதிகரிக்கிறது.
இதை கருத்தில் கொண்டு, பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்துவிட்டு வர வேண்டும் என்றும், சாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி சீட்டை ஆன்லைன் மூலம் பெறலாம் என்றும், கொரோனா பரவலை கருத்தில்கொண்டு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறக்கட்டளை அறிவுறுத்தியுள்ளது.
Comments