அஞ்சனாத்ரி மலையில் அவதரித்தாரா இறைவன் ஆஞ்சநேயர் ? ஆய்வு செய்ய உத்தரவு
திருப்பதி சேஷாச்சல மலைதொடரில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் இறைவன் ஆஞ்சநேயர் அவதரித்தாரா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆகம ஆலோசனை குழுவிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சேஷாச்சல மலைத்தொடரில் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய 7 மலைகள் உள்ளன. இதில் அஞ்சனாத்ரி மலையில் அஞ்சனா தேவி நீண்ட காலம் தவமிருந்து ஆகாச கங்கையில் நீராடி ஜபாலி என்னும் இடத்தில் ஆஞ்சநேயரை மகனாக பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.
அதுபோல அவர் அங்குதான் அவதரித்தாரா என்பது குறித்து ஆய்வு செய்ய தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அஞ்சனாத்ரி மலையில் மிகப்பெரிய ஆஞ்சனேயர் சிலையும், ஜபாலியில் ஆஞ்சனேயர் கோயிலும் உள்ளது.
இந்த ஆய்வின் மூலம் ஆஞ்சநேயரின் அவதாரம் அஞ்சனாத்ரி மலையில் நடைபெற்றது உறுதியானால், அங்கு பிரமாண்ட கோயில் கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
Comments