ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோயில் பகல் பத்து 7-ம் நாள் விழா : முத்து கிரீடம், மகர கண்டிகை திருவாபரணங்கள் சூடி பக்தர்களுக்கு காட்சியளித்த நம்பெருமாள்
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோயிலில் பகல் பத்து 7-ம் நாள் விழாவையொட்டி, நம்பெருமாள் முத்து கிரீடம், மகர கண்டிகை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான அக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து திருநாள் விமரிசையாக நடைபெறுகிறது.
பகல் பத்து திருநாளின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
7ம் நாளான இன்று காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் முத்து கிரீடம்,மகர கண்டிகை, ரத்ன அபயஹஸ்தம், காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார்.
Comments