கடும் குளிர்- பனிமூட்டத்தால் வடஇந்தியாவில் மக்கள் அவதி

0 1152
வட இந்தியாவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மக்கள் கம்பளிகளை அணிந்தபடி நடமாடுகின்றனர்.

வட இந்தியாவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மக்கள் கம்பளிகளை அணிந்தபடி நடமாடுகின்றனர்.

ரயில்களில் டெல்லி வந்து சேரும் பயணிகள் தாங்க முடியாத குளிராலும் பனிமூட்டத்தாலும் தவிக்கின்றனர். ஆங்காங்கே சுடச்சுட தேநீர் கடைகளும் முளைத்துள்ளன.

வீடு இல்லாமல் சாலையோரம் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் அரசு அமைத்துள்ள இரவு அடைக்கல மையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

இதனிடையே உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள இரவு தங்கும் முகாமைப் பார்வையிட்டு அங்கு அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று நேரில் ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments