பாஜகவுடன் தேவகவுடா கட்சி இணைப்பா?... கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம்

0 2795

பாரதிய ஜனதாவுடன் தேவேகவுடா கட்சி இணைய உள்ளதா என்பது குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக மேலவைத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு குமாரசாமி  கட்சி ஆதரவு வழங்கியதாகவும், ஆனால் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாஜகவில் சேரவில்லை என்றும் எடியூரப்பா தெரிவித்தார். 

பாரதிய ஜனதாவுடன் குமாரசாமி கட்சி இணைக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார். 

அத்தகைய சூழ்நிலை தற்போது எழவில்லை என்று கூறிய எடியூரப்பா, இணைப்பு தொடர்பாக வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments