800 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வியாழன், சனி கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் அரிய நிகழ்வு- வெறும் கண்களால் காணலாம்
800 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் கிரகமும் சனிக்கிரகமும் ஒரே நேர்கோட்டில் வரப்போகும் அரிய நிகழ்வை நாளை தமிழகத்தில் பார்க்கலாம் என வானவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சூரியனை சுற்றி வரும் போது, ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் சில நேரங்களில் நேர் கோட்டில் வருவது உண்டு. அந்த வகையில் நாளை வியாழன் கிரகமும் சனிக்கிரகமும் ஒரே நேர்கோட்டில் வரவுள்ளன என்றும் அப்போது அவை ஒரே நட்சத்திரம் போன்று தோற்றமளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
வெறும் கண்களால் இந்த அரிய நிகழ்வை பார்க்க முடியும் என்று கூறும் வானியல் நிபுணர்கள், இதற்கு முன்னதாக கடந்த 1226-ம் ஆண்டு இரு கோள்களும் இதேபோல நேர்க்கோட்டில் வந்ததாகக் கூறுகின்றனர். அதன் பின்னர் 800 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மாலை சூரியன் மறைந்து 6.30 மணியளவில் இந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.
Comments