நடிகர் விஜயை சந்திக்க வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்... விஜய் வராததால் இன்றும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

0 13470
நடிகர் விஜயை சந்திக்க அவரது பனையூர் பண்ணை இல்லத்துக்கு வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய் வராததால் இன்றும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நடிகர் விஜயை சந்திக்க அவரது பனையூர் பண்ணை இல்லத்துக்கு வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய் வராததால் இன்றும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சனிக்கிழமையன்று நாமக்கல், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திப்பார் என்று தகவல் வெளியானது. அதன்படி பனையூர் பண்ணை வீட்டில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குவிந்தனர்.

ஊடகங்களுக்கு இந்தத் தகவல் கசிந்ததால் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இன்று திருவாரூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிகாலை முதலே நடிகர் விஜயை சந்திக்க வந்து பண்ணை வீட்டில் காத்திருந்தனர்.

ஆனால் இந்த முறையும் விஜய் வராத நிலையில், வந்திருந்தவர்களுக்கு உணவு கூட வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments