ஆறு புதிய EQ வரிசை மின்சார கார்களை அறிமுகப்படுத்துகிறது மெர்சிடஸ் பென்ஸ்
ஆறு புதிய EQ வரிசை மின்சார கார்களை விற்பனைக்கு விட மெர்சிடஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.
EQ கார் ரகங்களை EQA, EQB, EQE, EQS வரிசையில் வெளியிட உள்ளதாக இந்த ஆண்டு துவக்கத்திலேயே அந்த நிறுவனம் அறிவித்தது. அத்துடன் வரும் 2025 வாக்கில் 25 PHEV மாடல் மின்சார கார்களை அறிமுகப்படுத்தி, அவற்றை வாய்ப்புள்ள எல்லா சந்தைகளிலும் விற்கவும் மெர்சிடஸ் முடிவு செய்துள்ளது.
EQS என்பது எஸ்-கிளாஸ் செடன் காரின் மின்சார வடிவமாகும். EQ வரிசையில் முதல் காராக அது வெளிவருகிறது.ஜெர்மனியில் உள்ள Sindelfingen தொழிற்சாலையில் இது உருவாக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து GLA அடிப்படையிலான காம்பேக்ட் மின்சார SUV -யை விற்பனைக்கு விடும் திட்டமும் உள்ளது.
இந்த வரிசையில் கடைசி காரான இ-கிளாஸ் செடனின் மின்சார வடிவம் EQE அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments