கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இத்தாலியில் மீண்டும் தேசிய அளவிலான முழுஊரடங்கு
இத்தாலியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கொரோனா பரவலைத் தடுக்க மீண்டும் தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனாவால் அதிகப் பாதிப்புக்குள்ளான இத்தாலியில் கோடைக்காலத்தில் கொரோனா பரவல் குறைந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய விழாக்காலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் டிசம்பர் 24 முதல் 27 வரையும், டிசம்பர் 31 முதல் ஜனவரி 3 வரையும், ஜனவரி 5, 6 ஆகிய நாட்களிலும் தேசிய அளவிலான முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனப் பிரதமர் ஜீசப் கான்டே அறிவித்துள்ளார்.
இந்த நாட்களில் வேலைக்கும் மருத்துவமனைகளுக்குச் செல்லவும் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், விடுமுறைக்காலம் முழுவதும் மது விடுதிகள், உணவு விடுதிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments