எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு; மேலும் 4 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..

0 1469
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு; மேலும் 4 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..

ல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, தமிழகத்தை சேர்ந்த மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த கான்ஸ்டன், ரமேஷ், பாண்டு, மோகன் ஆகிய 4 மீனவர்கள் விசைப்படகில் நேற்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 பேரையும் கைது செய்து இலங்கை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு படகிலேயே 4 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் 4 பேரையும் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 4 பேரையும் சேர்த்து, கடந்த ஒரு வாரத்தில் 40 தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments