”உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை” குஜராத் ஜாம் நகரில் அமைக்கிறது ரிலையன்ஸ்..!
உலகிலேயே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையை, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் குழுமம் கட்ட உள்ளது.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சிந்தனையில் உருவான இந்த மிருகக்காட்சி சாலை 280 ஏக்கரில் அமைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விலங்கின வகைகள், முதலை-பாம்புகள் மற்றும் பறவைகள் இந்த மிருகக்காட்சி சாலையில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
Greens Zoological, Rescue & Rehabilitation Kingdom என பெயரிடப்பட்டுள்ள இது இரண்டு ஆண்டுகளில் தயாராகி விடும் என ரிலையன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொல்கத்தாவில் c என்ற பெயரில் தனியார் மிருகக்காட்சி சாலை ஒன்று உள்ளது.
Comments