டெல்லியில் தொழிற்சாலையின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

0 1120
டெல்லியில் தொழிற்சாலையின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

டெல்லியில் தொழிற்சாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு டெல்லியில் உள்ள கயலா என்ற இடத்தில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் செப்பனிடும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை திடீரென தொழிற்சாலையின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

அப்போது தொழிற்சாலைக்குள் 3 பெண்கள் உள்பட 6 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் குருகோவிந்த் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments