சின்ன சின்னத் தூறல்கள்..! கையில் குடை..!! படகை ஓட்டியபடியே மிதக்கும் திரையரங்கத்தில் சினிமாவை ரசிக்கும் மக்கள்...

0 1845
சின்ன சின்னத் தூறல்கள்..! கையில் குடை..!! படகை ஓட்டியபடியே மிதக்கும் திரையரங்கத்தில் சினிமாவை ரசிக்கும் மக்கள்...

சின்ன சின்னத் தூறல்கள் பொழிய கையில் குடை பிடித்தபடி, அதிக நீரோட்டம் இல்லாத சிறிய கால்வாயில் நீண்ட அழகான படகில் அமர்ந்தபடி பெரிய திரையில் பிடித்த சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் வழங்குகிறது.

கையில் நொறுக்குத் தீனியைக் கொறித்தபடி கொரோனா பயமில்லாமல் இடைவெளியுடன் படம் பார்க்கும் அனுபவம் பலரைக் கவர்ந்து வருகிறது.ஒரு நாளுக்கு இரண்டு காட்சிகள் மட்டும் இங்கு நடைபெறுகின்றன.

படத்தின் வசனத்தையும் இசையையும் ரசிப்பதற்கு பார்வையாளர்களின் மொபைலில் ஒரு ரேடியோ அலைவரிசை அளிக்கப்படுகிறது. காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு அதனை ரசிக்க முடியும்.

இந்த ஆண்டு கொரோனாவால் சினிமாவை இழந்த பலருக்கு இந்த அனுபவம் வித்தியாசமான மகிழ்ச்சியைத் தருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments