மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட எம்பி பிரக்யாசிங் தாக்கூர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

0 1546
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட எம்பி பிரக்யாசிங் தாக்கூர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்பி பிரக்யாசிங் தாக்கூர் அடுத்த மாதம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு செப்டம்பரில் மாலேகானில் ஒரு மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில், 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது ஜாமீனில் இருக்கும் அவர், வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே ஆஜராகவில்லை.

நேற்று நடந்த விசாரணையிலும் ஆஜராகாததால் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் ஜனவரி 4ம் தேதி கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments