திருவண்ணாமலையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன் அதிமுகவினர் கோஷ்டி மோதல்... சமாதானம் செய்த பின்னரும் மேடைக்கு கீழே மோதிக் கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
செங்கம் அருகே கண்ணாகுருக்கை என்ற இடத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
விழா நடந்து கொண்டிருக்கும் போது மேடையில் மாவட்ட துணைச் செயலாளர் அமுதா வெங்கடேஷன் ஆதரவாளர்களுக்கும், கண்ணாகுறுக்கை ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாம்மாள் வேணுகோபால் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
தொடர்ந்து இருதரப்பினரையும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சமாதானம் செய்தார். அதன் பின்னரும், மேடைக்கு கீழே இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொண்டனர்.
இதனால் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை செங்கம் காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
Comments