ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி சொத்து முடக்கம்- கிரிக்கெட் சங்க நிதி மோசடி புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை

0 2144
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி சொத்து முடக்கம்- கிரிக்கெட் சங்க நிதி மோசடி புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை

கிரிக்கெட் சங்க நிதி மோசடியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் 11 கோடியே 86 லட்சம் ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது.

இந்த நிதியை முழுமையாக கிரிக்கெட் வளர்ச்சிக்காக பயன்படுத்தாமல், 43 கோடியே 69 லட்சம் ரூபாயினை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த பரூக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகளான கான், மிர்சா, மிர் மன்சூர் கசான்பர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்கள் 2 பேர் மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments