வேதியியல் பாட ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி ஆன்லைனில் நடைபெறும்: பள்ளிக் கல்வித்துறை

0 3267

வேதியியல் பாட ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள வேதியியல் பாட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், அண்மையில் தேர்வை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம், வெள்ளிக்கிழமை தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை வெளியிட்டது.

பட்டியலில் உள்ளவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி EMIS இணையதளம் மூலம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தகுதியற்ற நபருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டால் அதற்கு முதன்மை கல்வி அலுவலர்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments