சென்னையில் நாளை அதிமுக, திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா... முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

0 2247

சென்னையில் நாளை அதிமுக, திமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா அ.தி.மு.க.- தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் சென்னையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை சிறப்பாக கொண்டாட 2 கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ளது.

அ.தி.மு.க. சார்பில் நாளை மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறுகிறது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள். இதே போல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சாந்தோமில் நாளை மாலை நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments