விஸ்ட்ரான் கார்ப்பரேஷனுக்கு புதிய ஆர்டர்கள் கிடையாது - ஆப்பிள் திட்டவட்டம்
கோலாரில் உள்ள ஆப்பிள் போன் அசெம்பிளி ஒப்பந்த நிறுவனமான விஸ்ட்ரான் கார்ப்பரேஷனுக்கு புதிய ஆர்டர் எதையும் வழங்கப்போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தைவான் நிறுவனத்தில் கடந்த 12 ஆம் தேதி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் மூண்டு ஆலை மூடப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
அதில் விஸ்ட்ரான், நன்னடத்தை விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆப்பிளின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பணியாளர்களின் வேலை நேரத்தை சரியாக திட்டமிடுவதில் விஸ்ட்ரான் தோல்வி அடைந்து விட்டதாகவும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
விஸ்ட்ரான் பிரச்சனையால் ஆப்பிளின் இந்திய வர்த்தக விரிவாக்கத் திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Comments