இந்தியா உருவாக்கிய உலகிலேயே நவீன பீரங்கி

0 12052
இந்தியா உருவாக்கிய உலகிலேயே நவீன பீரங்கி

சர்வதேச தரம் வாய்ந்த ஏடிஏஜிஎஸ் பீரங்கியை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கும் இந்த பீரங்கி உலகில் வேறு எந்த நாட்டு ராணுவத்திலும் இல்லை.

ஒடிசா மாநிலம் பாலாசூரில் உள்ள ஆய்வு களத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய ரக பீரங்கியை பரிசோதித்தது. முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த இழுவை ரக பீரங்கி, 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தகர்ந்து எறிந்தது.

18 டன் எடை கொண்ட இந்த பீரங்கி, 22 அடி நீளமுள்ள சுடுகுழாயை கொண்டது. 3 முதல் 70 டிகிரி வரையிலான சாய்கோணத்தில் திருப்பி சுடும் வல்லமை கொண்ட இந்த பீரங்கியை இயக்க 6 முதல் 8 பேர் தேவை. ஒரு நிமிடத்தில் தானியங்கி முறையில் 5 முறை அடுத்தடுத்து குண்டுகளை ஏவும் திறனும் இந்த பீரங்கிக்கு உள்ளது. 

பாரத் போர்ஜ் மற்றும் டாடா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் இந்த பீரங்கியை உருவாக்கி உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி முற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி சைலேந்திர காடே தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு இது போன்ற 1800 இலகு ரக இழுவை பீரங்கிகள் தேவைப்படும் நிலையில் அதனை டிஆர்டிஓ பூர்த்தி செய்யுமென அவர் தெரிவித்தார்.

சீனா, பாகிஸ்தான் மட்டுமல்ல உலக நாடுகளிடம் உள்ள இதே ரக பீரங்கிகள் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் தூர இலக்கை மட்டுமே தாக்கும் நிலையில் இந்திய பீரங்கி 48 கிலோ மீட்டர் தூர இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் என்றார். மேலும் போபர்ஸ் உள்ளிட்ட பீரங்கிகள் ஒரு நிமிடத்தில் மூன்று குண்டுகளை சுடும் நிலையில் இந்திய பீரங்கி 5 குண்டுகளை பொழியும் என்று அவர் கூறினார்.

மேலும் எடை குறைவு என்பதால் எளிதாக இந்த இடத்திற்கும் கொண்டு செல்ல முடியும் என்றும், எந்த கால நிலையிலும், எந்த சூழலிலும் இயங்கும் வல்லமையும், தானியங்கி தொழில் நுட்பமும் உள்ளதால் இந்த பீரங்கிதான் உலகிலேயே சிறந்த து என சைலேந்திர காடே தெரிவித்தார். இதனால் இனி இலகு ரக இழுவை பீரங்கிகளை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியது இருக்காது என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments