தேர்தல் பணி அதிகாரிகளை சொந்த மாவட்டத்தில் பணியிலமர்த்தக் கூடாது - தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபட இருக்கும் அரசு அதிகாரிகளை, சொந்த மாவட்டத்தில் பணியமர்த்த கூடாதென தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2021 மே 24ம் தேதியோடு சட்டப்பேரவை காலம் நிறைவடைய இருப்பதை சுட்டிக்காட்டி, தலைமை செயலர் , தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பிட்ட மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி 3 ஆண்டு பணியை பூர்த்தி செய்திருக்க கூடாதென உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் கடந்த காலத்தில் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கின நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளையும், அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நிலுவையில் இருக்கும் அதிகாரிகள் அல்லது தண்டனை பெற்ற அதிகாரிகளையும், மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளையும் தேர்தல் பணியில் நியமிக்க கூடாதெனவும் கேட்டு கொண்டுள்ளது.
இதேபோல் 6 மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் அதிகாரிகளையும் தேர்தல் பணியில் அமர்த்த கூடாதெனவும் அறிவுறுத்தியுள்ளது.
Comments