ஃபிஃபா உலகக் கோப்பை : முழு வீச்சில் தயாராகி வரும் கத்தார்

0 2654

கத்தாரில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக கட்டப்பட்டுள்ள  அல் ராயன் மைதானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து ரசிகர்கள் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை  திருவிழாவாக கொண்டாடுவார்கள். ஃபிஃபா உலகக் கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். 21ஆவது  ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் ஆனது.  2022 ஆம் வருடத்துக்கான உலக கோப்பை போட்டிகள் கத்தாரில் நடைபெறுகிறது. அதன்படி,  ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் கத்தாரில் நவம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. 

உலகக் கோப்பையை நடத்தும் முதல் வளைகுடா நாடு கத்தார் ஆகும்.  இதற்கு முன்பு உலக கோப்பையை நடத்திய சிறிய நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து  பெற்றிருந்தது.  கத்தாரை விட 3 மடங்கு பெரிய நாடன சுவிட்சர்லாந்து 1954- ஆம் ஆண்டு உலக கோப்பையை நடத்தி காட்டியது. 

உலக கோப்பை போட்டிகளை நடத்த கத்தார் நாடு  முழு வீச்சில் தயாராகி வருகிறது. உலகக் கோப்பை போட்டியை நடத்த கத்தாரில்  8 புதிய மைதானங்களை கட்ட திட்டமிட்டது. அதில் 3 மைதானங்கள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள்ள நிலையில், நான்காவது மைதானம்  தலைநகர் தோஹா அருகேயுள்ள  அல் ராயன்  பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு.  இந்த மைதானம் 40 ஆயிரம்  இருக்கைகள் கொண்டது. மேலும்,  அடுத்த ஆண்டுக்குள் மேலும் 4 மைதானங்கள் திறக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments