எல்லை அத்துமீறலை புதிய இந்தியா பொறுத்துக் கொண்டிருக்காது - சீனாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

0 1648

எல்லையில் அத்துமீறினால், புதிய இந்தியா, பொறுத்துக் கொண்டிருக்காது என, சீனாவுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் உள்ள இந்திய விமானப் படை அகாடமி தளத்தில் நடைபெற்ற, புதிய விமானப்படை அதிகாரிகளின் கூட்டு அணிவகுப்பு மரியாதையை ராஜ்நாத்சிங் ஏற்றுக் கொண்டார்.

விழாவில் உரையாற்றிய ராஜ்நாத்சிங், லடாக் எல்லையில் அத்துமீறிய சீனாவுக்கு இந்திய கொடுத்த, கடுமையான பதிலடிக்கு, பல்வேறு நாடுகளும் பாராட்டுத் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

கொரோனா பெருந்தொற்றின் கடினமான காலங்களில் கூட, எல்லையில் அத்துமீறல் உள்ளிட்ட சீனாவின் நடத்தை, அந்நாட்டின் மிக மோசமாக நோக்கங்களை பிரதிபலித்திருப்பதாக, ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments