சூரி வழக்கு தொடர்பாக, யார் - யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாள்களில் தெரிய வரும்- விஷ்ணு விஷால்
சூரி வழக்கு விவகாரத்தில், யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் என்று பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
நில மோசடி தொடர்பாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் மீது சூரி தொடுத்துள்ள வழக்கு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர், விஷ்ணு விசாலுக்கு அனுப்பிய செய்தியில், தமக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்றும், ஆனால் சூரி செய்திக்குப் பிறகு அவரை வெறுப்பதாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள விஷ்ணு விஷால், உண்மை இன்னும் வெளியே வரவில்லை என்றும், யார் நம்பிக்கை துரோகம் செய்தார்கள் என்பது சீக்கிரமாகவே வெளியே வரும் என்று கூறியுள்ளார்.
Comments