வனச்சரகர் அலுவலர் மனைவிக்கு சொந்தமான தோட்டத்தில் 350 கிலோ சந்தன கட்டைகள்!-

0 4650

ஸ்ரீவில்லிபுத்தூரில், தோட்டத்தில் சந்தனமரக் கட்டைகளைப் பதுக்கியது தொடர்பாக  வனச்சரக அலுவலர் ஒருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பந்தப்பாறை பகுதி. இங்கு,, தனியாருக்குச் சொந்தமான ஏராளமான தோப்புகள் உள்ளன. இதே பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராகப் பணிபுரியும் ஆரோக்கியசாமி என்பவரின் மனைவி கலைவாணிக்குச் சொந்தமான தோட்டமும் அமைந்துள்ளது.

இந்தத் தோட்டத்தில் சந்தன மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் வனத்துறையினருக்கு ரகசியத்  தகவல் கிடைத்து. இதையடுத்து மாவட்ட வன உதவி அலுவலர் அல்லிராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் தோட்டத்துக்குள் புகுந்து, அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பிடப்பட்டுள்ளது.. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகள் ஸ்ரீவில்லிப்புத்தூர் வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்  மாவட்ட  வன அலுவலர், தோட்டத்தில் சந்தன மரக் கட்டைகள் பதுக்கியது தொடர்பாக  ஆரோக்கியராஜிடம் விசாரணை நடத்தி வருகிறார். புலன் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 350 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட தோட்டத்தின் உரிமையாளரான கலைவாணியின் கணவர் வனச்சரக அதிகாரியாக உள்ளதால் விசாரணையில் தோய்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ஆரோக்கியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வனச்சரக அதிகாரியின் மனைவியின் தோப்பிலிருந்தே சந்தன மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments