வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் விற்பனை என விளம்பரம் செய்த 4 பேர் கைது

0 1616

வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகம் விற்பனை என்று விளம்பரப்படுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பிரதமர் மோடி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு அவரது அலுவலகம், அங்குள்ள ஜவகர் நகர் காலனியில் உள்ளது.

இந்நிலையில் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் பிரதமரின் இந்த அலுவலக புகைப்படத்தை பதிவேற்றிய லட்சுமிகாந்த் ஓஜா என்பவர்,6500 சதுர அடி பரப்பிலான அந்த கட்டிடத்தில் நான்கு குளியல் அறைகளை கொண்ட நான்கு படுக்கை அறைகள் இருப்பதாகவும், இது விற்பனை செய்யப்படும் என்றும், 7.5 கோடி ரூபாய் விலை என்றும் கூறியிருந்தார்.

இதுபற்றி அறிந்த போலீசார், அந்த விளம்பரத்தை அகற்றியதோடு, ஓஜா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments