விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் -பிரதமர் உறுதி

0 1560

விவசாயிகள் விளைவிக்கும், நெல், கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில், "உழவர் நலன்" என்ற தலைப்பில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், காணொலி மூலம் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, தவறான தகவல்களை பரப்பி, விவசாயிகளை, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார்.

புதிய வேளாண் சட்டங்கள் ஏதோ ஒருநாள் நள்ளிரவில் இயற்றப்பட்டு, அறிமுகம் செய்யப்படவில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த இருபது, முப்பது ஆண்டுகாலமாக, மத்திய, மாநில அரசு வேளாண் சீர்திருத்தம் குறித்து, கலந்துரையாடல், ஆலோசனைகளை நிகழ்த்தியதன் அடிப்படையிலேயே, புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக, அவர் கூறினார்.

எனவே, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதையும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.

விளைபொருள் கொள்முதலுக்கான, குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர், புதிய வேளாண் சட்டங்களால், குறைந்த பட்ச ஆதார விலை நீக்கப்படவில்லை என உறுதியளித்தார்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கான, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்வதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள், விவசாயிகள் மத்தியில் வதந்தி பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments