மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்தார், நாராயணசாமி

0 1959
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், மத்தியஅரசின் வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், மத்தியஅரசின் வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்துள்ளார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகள் சார்பில், புதுச்சேரி - அண்ணா சதுக்கம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் முடிவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்தார்.

பின்னர், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அனைவரும் குளிர்பானம் அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இந்த உண்ணா விரதத்தில் திமுக சார்பில், பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments