நீண்ட நாட்களுக்குப் பின் விளையாடுவது, அறிமுக போட்டியில் விளையாடுவது போல உள்ளது - இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்

0 6442
நீண்ட நாட்களுக்குப் பின் விளையாடுவது, அறிமுக போட்டியில் விளையாடுவது போல உள்ளது - இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் விளையாடுவது, அறிமுக போட்டி போல உள்ளதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

10 மாதங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின், அடிலெய்டில் நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது  மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவில் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இந்த பயிற்சி இப்போது கைகொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments