சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுகாதார பணியாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருவது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் எஸ் ரெட்டி மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையின் போது நீதிபதிகள், ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்குவதற்கான வழிகாட்டுதலை வகுக்க வேண்டும், அல்லது ஒரு நெறிமுறையை மத்தி
அரசு வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த விவகாரம் குறித்து இரண்டு நாட்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
Comments