ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் பணம் மோசடி : 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை - ரூ.2.15 கோடி அபராதம்

0 5497
ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் பணம் மோசடி : 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை - ரூ.2.15 கோடி அபராதம்

ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் பெண் காவலர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையுடன் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கோபிசெட்டிபாளையம் ஜீவா நகரை சேர்ந்த  கார்த்திக் சங்கர், ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றிய இவரது மனைவி காயத்ரி உள்பட 3 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையில் 73 பேரிடம் 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இந்த மோசடி வழக்கில் 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 2 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments